» சினிமா » செய்திகள்

சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் பொன்னியின் செல்வன்!

வியாழன் 31, ஜனவரி 2019 5:44:58 PM (IST)

பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதனை திரைப்படமாக தயாரித்து, நடிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. சிவாஜி நடிக்க அதை இயக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன் அதுவும் நடக்கவில்லை. கமல்ஹாசனும் முயற்சித்தார். 

தற்போது மணிரத்னம் தனது அடுத்த படமாக பொன்னியின் செல்வனை இயக்குகிறார். 300 கோடி ரூபாய் செலவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.  இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதையை ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யா ரஜினியின் மே 6 என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம், எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்துடன் இணைந்து, பொன்னியின் செல்வன் நாவலை, வெப் சீரிஸாக பல பாகங்களாக தயாரிக்கிறார். 

கிராபிக்ஸ் டிசைனரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா, இந்த வரலாற்று வலைத் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இந்த மெகா காவியத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சவுந்தர்யாவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இந்த தொடர் இருக்கும் என சவுந்தர்யா கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory