» சினிமா » செய்திகள்

சேலை அணிந்தாலும் ஆபாசமாக சித்தரிக்கிறார்கள்: சின்மயி வருத்தம்

புதன் 30, ஜனவரி 2019 3:24:39 PM (IST)

"நான் சேலை அணிந்தாலும் அதனை ஆபாசமாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்" என பாடகி சின்மயி கூறியுள்ளார்.

பாடகி சின்மயி ‘மீ டூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து சமூக விஷயங்கள் குறித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வருகின்றன. அவற்றை சின்மயி பொருட்படுத்தாமல் உடனுக்குடன் பதிலடியும் கொடுக்கிறார். ஏற்கனவே அவர் அணிந்த ஆடைக்கு சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒருவர், "நீங்கள் பொது இடங்களில் சேலை அணிந்து செல்லுங்கள்” என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சின்மயி, "நான் சேலை அணிந்து வந்தால் சில ஆண்கள் எனது இடுப்பு உள்ளிட்ட பகுதியை போட்டோ எடுத்து அதில் வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். அந்த படத்தை பார்த்து மோசமான தகவலையும் அனுப்புகிறார்கள். வேண்டுமென்றால் உங்களுக்கு அந்த ‘ஸ்கிரீன் ஷாட்’டை அனுப்புகிறேன். நான் சேலை அணிந்தாலும், ஜீன்ஸ் அணிந்தாலும் இந்தியன்தான்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சின்மயி மீ டூ பற்றி கூறும்போது, "மீ டூ விவகாரத்தில் மாற்றம் வரவேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பலர் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கினர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்” என்றார்.


மக்கள் கருத்து

சாமிFeb 2, 2019 - 02:49:58 PM | Posted IP 162.1*****

சில சேட்டை நபர்களை பொருட்படுத்தாதீர்கள் அம்மா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory