» சினிமா » செய்திகள்

விஜய் நடிப்பில் துப்பாக்கி 2 : ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி!!

செவ்வாய் 22, ஜனவரி 2019 12:26:26 PM (IST)விஜய் நடிப்பில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் துப்பாக்கி. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். வித்யுத் ஜம்வால், ஜெயராம், சத்யன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்தார். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2012-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம். இதைத் தொடர்ந்து கத்தி படத்தில் இருவரும் இணைந்தனர். விஜய் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படமும் ஹிட்டானதால், மூன்றாவது முறையாக சர்கார் படத்தில் இணைந்தனர். கடந்த வருடம் (2018) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸானது. இந்நிலையில், தனியார் இணையதள விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், துப்பாக்கி 2 படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். எனவே, நான்காவது முறையாகவும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory