» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படக்குழுவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!!

சனி 19, ஜனவரி 2019 4:04:58 PM (IST)

‘இந்தியன் 2’ படக்குழுவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். தற்போது 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ உருவாகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இந்தியன் 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், நேற்று படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இப்படத்துக்காக, பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். 

இந்நிலையில், படக்குழுவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஷங்கர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீ ட்வீட் செய்துள்ள அவர், ‘உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் இன்னொரு மிகப்பெரிய வெற்றிப் படத்துக்கான வாழ்த்துகள். குட் லட் நண்பா’ என்று தெரிவித்துள்ளார். ‘இந்தியன்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர். ஆனால் இந்தியன் படத்தின் 2ஆம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory