» சினிமா » செய்திகள்

விஸ்வாசம் வசூலைக் கிண்டல் செய்த தமிழ்ப்படம் இயக்குநர்!!

சனி 19, ஜனவரி 2019 3:56:18 PM (IST)

பொங்கலுக்கு வெளிவந்த விஸ்வாசம் படத்தின் வசூலைக் கிண்டல் செய்யும் தொனியில் "தமிழ்ப்படம்" இயக்குநர் சி.எஸ்.அமுதன் பதிலளித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இரு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய படம்தான்  அதிகம் வசூல் செய்ததாக வெளியிட்டு வருகிறார்கள். 11 நாட்களில் பேட்ட தமிழகத்தில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை உலக அளவில் ரூ.100 கோடி என்று கூறப்பட்ட விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 8 நாளில் ரூ.125 கோடியை த்தொட்டது என்று, விஸ்வாசம் படத்தை வெளியிட்டுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். மேலும் விஸ்வாசம் திரையிடப்பட்ட திரையரங்களில் கூடுதல் நாற்காலிகள் போடப்பட்டதாக் இந்த நிறுவனம் கூறியிருந்தது.

தொடர்ந்து இரு நிறுவனங்களும் போட்டி போட்டு வசூலைக் கூறியதால் சமூக வலைதளங்களில் பலரும் இதனை விமர்சித்தனர். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் உங்களது தமிழ்ப்படம் 2  8 நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்று கேட்க, அதற்கு சி.எஸ். அமுதன், ஒரே இருக்கையில் இரண்டு , மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டத்தைச் சமாளிக்க கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் திரையரங்களுக்குக் கொண்டு வரப்பட்டதால் அதனைக் கூறுவது கடினம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory