» சினிமா » செய்திகள்

நயன்தாரா, அஜித்துக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு

வியாழன் 17, ஜனவரி 2019 1:00:40 PM (IST)

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா, குழுவினருக்கு சென்னை காவல் துணை ஆணையர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து நடித்துள்ளார்கள் அஜித்தும்  நயன்தாராவும். இதற்கு, சென்னை காவல் துணை ஆணையர் ச. சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்குச் சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. 

* படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்துச் செல்வது...

* கதாநாயகன் கார் ஒட்டும்போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது, தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது...

* பெற்றோர்கள் தங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது...

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுற்றி நடிக்கும்போது அவரது ரசிகர்களும் பின்பற்றவேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா, அவரது குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Jan 18, 2019 - 05:51:27 AM | Posted IP 157.5*****

கிறுக்கனுங்க... எங்க இருந்து கிளம்பி வராணுங்களோ....

அருண்Jan 18, 2019 - 05:49:54 AM | Posted IP 157.5*****

இப்போ உள்ள வயசு பொண்ணுங்க பசங்கலாம் காம வெறி எடுத்து அலையுதுங்க... அதுக்குலாம் துணை நிக்கணும்னு சொல்லுரியளா?

அருண்Jan 18, 2019 - 05:47:57 AM | Posted IP 157.5*****

தலைவரே.... என்ன தான் சொன்னாலும்.... இதெல்லாம் டைரக்டர் கண்ட்ரோல்.... சும்மா சலம்ப கூடாது.... மெர்சல், சர்க்கார் கு விஜய் மேல பழி போடறதும் ஒரு வகை மன வியாதியே.... எல்லாம் டைரக்டர் செயல்... காரணம் எதுவா இருந்தாலும் அடிக்கிறது உதைக்கிறது எல்லாம் சட்டத்தின் படி ஏற்று கொள்ளப்பட்டதா.?? இதெல்லாம் உங்க ஆயா வீட்டு கணக்குல சேப்பிங்களா...

நல்லவன்Jan 17, 2019 - 10:14:31 PM | Posted IP 173.2*****

Good sir

நிஹாJan 17, 2019 - 01:22:59 PM | Posted IP 162.1*****

சபாஷ்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory