» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்? சிம்பு விலகல்..!!

திங்கள் 14, ஜனவரி 2019 4:23:58 PM (IST)



ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இந்தியன் 2’ படத்தில் இருந்து சிம்பு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் "இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.22 ஆண்டுகள் கழித்து "இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 

கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தற்போது கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிறது. 2021-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory