» சினிமா » செய்திகள்

இனிமேல் சிம்புதான் சூப்பர் ஸ்டார் - சீமான் சொல்கிறார்!

செவ்வாய் 8, ஜனவரி 2019 10:21:01 AM (IST)

தமிழ்நாட்டின் ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். 

நாம் தமிழர் கட்சி மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக `இன எழுச்சி முழக்கம் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான், வெற்றிமாறன் உள்ளிட்டோர். நிகழ்ச்சியில் பேசிய சீமான், ரஜினி, கமல் போன்றோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

அவர் பேசுகையில், ``ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். அவர்தான் உண்மையான ஆண்மகன். ரஜினி, கமல் போன்றோர் ஹீரோக்கள் அல்ல; ஜீரோக்கள். உங்கள் திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கிறார்கள். நல்லகண்ணுவைத் தாண்டிய ஒரு தலைவன் இந்தியாவிலேயே உண்டா? என்று பேசினார். சர்கார் பட விவகாரத்தில் விஜய் உறுதியாக நின்றிருக்கலாம் என்று கூறிய சீமான், `என் படத்தில் அவர் நடிக்க மாட்டாரு.. ஆனால், நான் பேசுனத எல்லாம் பேசி நடிப்பார் என்றும் கூறினார். 


மக்கள் கருத்து

சாமிJan 12, 2019 - 02:27:59 PM | Posted IP 162.1*****

வர வர - இவர் பவர் ஸ்டாரா ஓவர்டேக் பண்ணி போயிட்டு இருக்காரு -

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory