» சினிமா » செய்திகள்

ஜெ. பயோபிக்: சசிகலாவாக நடிக்கிறார் சாய் பல்லவி?

வெள்ளி 28, டிசம்பர் 2018 12:49:00 PM (IST)

விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா பயோபிக்கில், சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. பாரதிராஜா, விஜய், லிங்குசாமி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தங்களுடைய பாணியில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகின்றனர். இதில் இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும், பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 

இந்நிலையில், விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெ. பயோபிக்கில், வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் விஜய். முன்பாக விஜய் இயக்கத்தில் உருவான கரு படத்தின் மூலமாக தான் சாய் பல்லவி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாய் பல்லவி நடிப்பது குறித்து யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Black Forest Cakes



Thoothukudi Business Directory