» சினிமா » செய்திகள்

பிரபல திரைப்பட நடிகர் சீனுமோகன் மரணம் : கிரேஸி மோகனின் நாடகக் குழுவைச் சேர்ந்தவர்

வியாழன் 27, டிசம்பர் 2018 1:40:43 PM (IST)

சென்னையில் குணச்சித்திர நடிகர் சீனு மோகன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் 1979-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்த சீனு மோகன் அந்த நாடகக் குழுவில் முக்கிய நடிகராக பணியாற்றியவர். சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து வருஷம் பதினாறு படத்தில் நடித்த அவர், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, தனுஷூடன் வட சென்னை, மெர்சல் படத்தில் நடிகர் விஜய்யுடனும் இணைந்து நடித்துள்ளார். மேடை நாடகங்கள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.சீனு மோகனின் மறைவிற்கு இயக்குநர் கிரேஸி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது உடல் அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் நாளை மறுதினம் தகனம் செய்யப்பட இருப்பதாக கூறபடுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory