» சினிமா » செய்திகள்

விஷால் பதவி விலகவேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பூட்டு

புதன் 19, டிசம்பர் 2018 1:51:17 PM (IST)

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளார்கள். 

பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்தும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது . 

மேலும் விஷால் குறித்து முதல்வரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதையடுத்து விஷால் பதவி விலகக் கோரி, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டுள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory