» சினிமா » செய்திகள்

பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி

திங்கள் 10, டிசம்பர் 2018 11:48:01 AM (IST)பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் விஜய் சேதுபதி பேசினார்.

பேட்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் சேதுபதி என்றே கூறலாம். லேட்டாக வந்தவரை நேரடியாக மேடைக்கு அழைத்தனர். விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்ததுமே ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த அளவுக்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். ரஜினியே எழுந்து நின்று விஜய் சேதுபதியை வரவேற்றார். 96 படத்தில் தன்னுடன் நடித்த த்ரிஷாவை பார்த்ததும் இது என் ஜானு சார் என்று விஜய் சேதுபதி ரஜினியிடம் கூறியது க்யூட்டாக இருந்தது. 

இதை கேட்ட த்ரிஷா வெட்கப்பட்டு சிரித்தார். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிய பூரிப்பு த்ரிஷா முகத்தில் நேற்று தெரிந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் அனைவருமே ரஜினிக்கு ஐஸ் இல்லை ஐஸ் பாரையே வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி ரஜினியை எக்ஸ்ட்ரா புகழவில்லை. பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று உண்மையை சொன்ன விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும். ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர்கள் அய்யோ தலைவர் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்களோ, திட்டுவார்களோ என்று பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி தில்லாக நான் தான் அவரின் வில்லன் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory