» சினிமா » செய்திகள்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படத்தின் பெயர் "நாற்காலி"?

சனி 8, டிசம்பர் 2018 4:43:07 PM (IST)

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு "நாற்காலி "என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. 
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு "நாற்காலி" என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த  2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. 

பேட்ட படத்தோடு சினிமாவை ஓரங்கட்டிவிட்டு  முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என நினைத்தால் அதுதான் இல்லை. அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது.  இந்த படம் முருகதாஸின் கத்தி, சர்கார் படங்களை விட ஒரு படி மேலே சென்று அரசியல் பேச உள்ளதாம் . இதனை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் தற்போது, இந்த படத்துக்கு " நாற்காலி "என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படம் என்றாலே சர்ச்சையான குறைவு இல்லாதவகையில் இருக்கும் ஆக "நாற்காலி" என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். இதன் மூலம் படத்தில் ரஜினி முதல்வராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.ரஜினி இதுவரை எந்த படத்திலும் அரசியல்வாதியாக நடித்ததில்லை முதன்முறையாக முருகதாஸ் தான் களமிறக்கியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory