» சினிமா » செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பு 14-ம் தேதி தொடங்குகிறது?

சனி 1, டிசம்பர் 2018 5:08:21 PM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .

கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்ததால் இரண்டாம் பாகத்திலும் அந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். 

அவர்கள் கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். வயதான தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார். படப்பிடிப்புக்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. வருகிற 14-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முதல் பாகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சம் முக்கிய கருவாக இருந்தது. இரண்டாம் பாகம் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள 2.0 படம் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன. இந்தியன்-2 படத்தையும் அதே பிரமாண்டத்தில் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா பெயர் அடிபடுகிறது. வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory