» சினிமா » செய்திகள்

சாதி ரீதியாக விமரிசனம்: நடிகை ரித்விகா ஆவேசம்!

வெள்ளி 30, நவம்பர் 2018 3:55:50 PM (IST)

தன் மீது சாதி ரீதியாக விமரிசனம் செய்பவர்களுக்கு நடிகை ரித்விகா கண்டனம் தெரிவித்துள்ளார்

விஜய் டிவியில் 100 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா தேர்வு செய்யப்பட்டார். அவருக்குக் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாம் இடத்தை நடிகை விஜயலட்சுமியும் பெற்றார்கள்.

இந்நிலையில் தன் மீது சாதி ரீதியாக விமரிசனம் செய்பவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் ரித்விகா. ட்விட்டரில் அவர் கூறியதாவது: ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று ஆவேசமாகத் தன் கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory