» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புதன் 7, நவம்பர் 2018 3:56:34 PM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துவரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தூங்காவனம் படத்தின் இயக்குநரான ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம். இதில், அக்‌ஷரா ஹாசன் மற்றும் அபு ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், அடுத்தகட்டப் படப் பிடிப்புக்காக படக் குழுவினர் மலேசியா செல்ல இருக்கின்றனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (நவம்பர் 6) வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டார். ‘கடாரம் கொண்டான்’ எனப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கடாரம் கொண்டான்’ என்பது ராஜேந்திர சோழனின் பட்டப் பெயராகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes
Thoothukudi Business Directory