» சினிமா » செய்திகள்

வடசென்னை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

சனி 27, அக்டோபர் 2018 4:08:12 PM (IST)வடசென்னை படத்தில் இருந்து ஆபாச வசனங்கள், பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சிக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து வடசென்னை படத்தில் இருந்து ஆண்ட்ரியா - அமீர் முதலிரவுக் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் கெட்டவார்த்தை வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory