» சினிமா » செய்திகள்

சர்கார் படத்துக்கு யு/ஏ: தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது!

வியாழன் 25, அக்டோபர் 2018 5:14:59 PM (IST)விஜய் நடித்துள்ள சர்கார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் நவம்பர் 6 தீபாவளியன்று வெளிவருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தீபாவளியன்று அதாவது நவம்பர் 6 அன்று சர்கார் படம் வெளியாகவுள்ளது. ஆனால் படத்தை நான்கு நாள் முன்னதாக அதாவது நவம்பர் 2 அன்று வெளியிடவேண்டும் என்று சில கோரிக்கைகள் எழுந்தன.

மெர்சல் படத்தை விடவும் அதிக விலைக்கு சர்கார் படம் வியாபாரம் ஆகியுள்ளதால் அதிக விடுமுறை தினங்கள் இருந்தால்தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறமுடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் சர்கார் படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று அதாவது நவம்பர் 6 அன்றுதான் வெளிவரவுள்ளது. தமிழ்நாட்டு விநியோகஸ்தர்கள் தீபாவளியன்று படம் வெளியாகவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவர்களின் கோரிக்கையை ஏற்று அதே தினத்தில் படம் வெளிவருகிறது. மேலும் தணிக்கையில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சர்கார் பட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் சர்கார் படம் நவம்பர் 6 அன்று திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Black Forest CakesThoothukudi Business Directory