» சினிமா » செய்திகள்

ரஜினியுடன் மீண்டும் இணையும் இயக்குநர் மகேந்திரன்!

செவ்வாய் 9, அக்டோபர் 2018 4:11:01 PM (IST)

ரஜினிகாந்த் உடன் கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன் மீண்டும் அவருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இசையமைக்கிறார். பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோன்று படப்பிடிப்பு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் சசிகுமார் பேட்ட படத்தில் நடிப்பதாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடன் ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை உள்ளிட்ட கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன், பேட்ட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஜினியை இயக்கிய மகேந்திரன் இப்படத்தில் அவருடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.  முன்னதாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பேட்ட படத்தில் அவருடைய கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory