» சினிமா » செய்திகள்

‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’

திங்கள் 8, அக்டோபர் 2018 5:57:40 PM (IST)



விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டில் வென்ற செந்தில் கணேஷ், ‘கரிமுகன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய வெற்றி, மக்கள் இசைக் கலைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல், உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏகப் பிரபலம். அந்தப் பாடல், பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூ டியூபில் அந்தப் பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

‘சின்ன மச்சான்’ பாடலை எழுதியவர், செல்லத் தங்கையா. செந்தில் கணேஷின் குரு இவர்தான். இவர் ஏற்கெனவே செந்தில் கணேஷை ஹீரோவாக வைத்து ‘திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கி, வெளியிட்டுள்ளார். அதற்கடுத்து ‘கரிமுகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இதில், செந்தில் கணேஷ் ஜோடியாக, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் நடித்துள்ளார். எலக்ட்ரீஷியனாக செந்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கேரக்டர் பெயரும் செந்தில் தான். புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory