» சினிமா » செய்திகள்

பரியேறும் பெருமாள் படத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு

புதன் 3, அக்டோபர் 2018 4:52:14 PM (IST)இயக்குநர் ரஞ்சித் தயராரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார் .

மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித், தன்னுடைய ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸானது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே, படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்துள்ளான் ‘பரியேறும் பெருமாள்’.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். "நண்பர்கள் பலர் போன்செய்து படத்தைப் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் இந்த முயற்சியையும் பயிற்சியையும் தொடருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார். இதேபோல பலரிடம் இருந்தும் படத்துக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory