» சினிமா » செய்திகள்

ரஜினியின் புதிய படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியீடு

வெள்ளி 7, செப்டம்பர் 2018 2:17:21 PM (IST)

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

படத்தில் ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இசை அனிருத். கடந்த ஜூன் மாதத்தில் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads


Thoothukudi Business Directory