» சினிமா » செய்திகள்

கருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் : இளையராஜா உருக்கம்

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 1:47:53 PM (IST)

கருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து நாம் எப்படி மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ பதிவில் கூறியுள்ளார். 

முன்னாள்முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியுள்ளதாவது: கருணாநிதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் உயிரிழந்த நாள் நமக்கெல்லாம் கருப்பு தினம். இந்தத் துக்கத்திலிருந்து நாம் எப்படி மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை. தூய தமிழ் வசனங்களை திரைப்படங்களில் அள்ளி வழங்கியவர். அரசியல், கலை, இலக்கியம், தமிழ் உள்ளிட்ட பல துறையில் சிறந்து விளங்கியவர். இது ஈடுசெய்யமுடியாத இழப்பு. இந்த இசை நிகழ்ச்சி முன்பே ஒத்துக்கொண்டது. இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory