» சினிமா » செய்திகள்

கருணாநிதி மறைவு.. நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல்

புதன் 8, ஆகஸ்ட் 2018 3:38:57 PM (IST)

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார் .

திமுக தலைவர்- முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பலர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் ட்வீட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மரியாதைக்குரிய ஸ்ரீ கருணாநிதி அவர்களுக்கு பிரார்த்தனை மற்றும் இரங்கல்..சாத் இந்துஸ்தானி படத்திற்காக நான் முதன்முதலாக தேசிய விருதை அவர் கையால் தான் வாங்கினேன். தேசிய விருது விழா சென்னையில் நடந்தபோது அவர் தான் முதல்வராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory