» சினிமா » செய்திகள்

அமெரிக்க டாக்டருடன் திருமண வதந்தி ; தமன்னா கோபம்

சனி 28, ஜூலை 2018 4:37:12 PM (IST)

தன்னுடைய திருமண வதந்தி குறித்து அறிந்த தமன்னா கோபம் அடைந்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். 

நடிகை தமன்னா குயின் பட தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளத்தாக இன்று தகவல் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சியான நடிகை தமன்னா டுவிட்டரில் இது பற்றி கோபமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னதாக அவரின் பெயர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அடிப்பட்டது. அதன் பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை தமன்னா காதலிப்பதாக சில காலம் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு நாள் நடிகர், மறுநாள் கிரிக்கெட் வீரர், தற்போது டாக்டர். இந்த வதந்திகளை எல்லாம் பார்த்தால் நான் கணவரை தேடும் பணியில் இருப்பதாக தெரிகிறது. காதல் பிடிக்கும் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆதாரமில்லாத செய்திகளை ஏற்க முடியாது என்று தமன்னா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நான் தற்போது சிங்கிளாக, சந்தோஷமாக உள்ளேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை தேடவில்லை. நான் தற்போது ரொமான்ஸ் செய்யும் ஒரே விஷயம் என் சினிமாவை தான். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நிலையில் இது போன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என தமன்னா நொந்துள்ளார். நான் திருமணம் செய்தால் அதை நிச்சயம் அனைவருக்கும் சொல்லிவிட்டுத் தான் செய்வேன். நான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த வதந்திகள் எல்லாம் யாரோ ஒருவருடைய கற்பனையே என்றும் திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory