» சினிமா » செய்திகள்

டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!!

புதன் 11, ஜூலை 2018 12:28:58 PM (IST)

டார்ஜிலிங்கில் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். 

ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், வரும் நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 13, 2018 - 02:22:31 PM | Posted IP 162.1*****

அப்படியே போய்ட வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory