» சினிமா » செய்திகள்

சினிமாவில் இருந்தும் விலகும் முடிவு: கமல் நெகிழ்ச்சி!

திங்கள் 2, ஜூலை 2018 5:36:08 PM (IST)

நடித்தால் தான் சினிமா என்பது இல்லை, உங்களில் ஒருவனாக இருந்து சினிமாவைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கமல் கூறினார்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விஸ்வரூபம் 2 திரைப்பட பாடல் அரங்கேற்றம் நடந்தது. இதில், இசை அமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பார்வையாளர்கள் தரப்பில் இருந்து கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூர்மையாக அளித்த பதில்கள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. 

பார்வையாளர்களில் ஒருவர் கமலிடம் சினிமாவை விட்டு விலகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கு கமல் `நான் சினிமாவில் நடித்திருக்காவிட்டால் அந்தப் பக்கம் உங்களில் ஒருவனாக, ரசிகனாக இருந்திருப்பேன். எந்தப் பக்கம் இருந்தாலும் சினிமாவை விட்டெல்லாம் போகமாட்டேன். நடித்தால் தான் சினிமா என்பது இல்லை, உங்களில் ஒருவனாக இருந்து சினிமாவைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். என்றார். முத்தாய்ப்பாக அதைவிடவும் பெரிய பணியொன்றில் ஈடுபடப் போகிறேன் என்றும் மீண்டும் நடிக்கச் சொல்லி சலனப்படுத்திவிடாதீர்கள் என்றும் கூறினார்.

ஒரு விளம்பர இடைவேளைக்கு பின்பு கமல் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்தினார். சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்துள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறைகளில் மட்டும் நிச்சயம் கேமரா இருக்காது, அது குறித்த அச்சமோ சந்தேகமோ யாருக்கும் வேண்டாம் என்பதுதான் அது. ஷூட்டிங் சமயத்தில் ஒரு வேட்டி மறைப்பில் கூட நடிகைகள் உடை மாற்றுவார்கள். நாங்கள் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. 18 வயதில் பார்க்காத கமலுக்கு 62 வயதில் பார்க்க வேண்டும் என்பதில்லை. தவிர சானல் டிஆர்பி ஏத்திக்கணும்னு அவங்களுக்கும் அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நானும் தொடர்பு வைத்திருக்க மாட்டேன். அதைச் செய்ய நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறி போட்டியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். பலத்த கரகோஷம் பார்வையாளர்களிடமிருந்தும் போட்டியாளர்களிடமிருந்தும் எழுந்தது.

ரசிகர்கள் எலிமினேட் செய்த மகதியிடன் பேசும் போது தேவர் மகன் படத்தின் போது ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். முதல் ஏழு நாள் முடிந்துவிட்டது. நீண்ட காலம் கழித்து மீண்டும் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி, கமலிடம் இந்த ஏழு நாள் காட்சிகளை மீண்டும் எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டுள்ளார். மீடியாவிலே இருந்த மகதி சற்று இடைவெளிக்கு பிறகு மீண்டும் மீடியாவின் முன் வரும்போது எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை அதற்கான காரணம் என்னவென்று கேட்டுவிட்டு, அதற்கு தனது தரப்பு அறிவுரையாக எந்தப் பயிற்சியையும் திறமையையும் நாம் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் திறமை துருப்பிடித்து விடும்.  மமதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 

நிகழ்ச்சியின் இறுதியில் கமல் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் குணாதிசயம் ஒன்று உள்ளது. அது வீட்டின் உறுப்பினர்கள் குறையக் குறைய சுவாரஸ்யங்கள் அதிகரிக்கும், சண்டையும் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் கமல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory