» சினிமா » செய்திகள்

விமல், ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கள் 2, ஜூலை 2018 11:56:37 AM (IST)



விமல், ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மாதவன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார்.

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் களவாணி. விமல், ஓவியா நாயகன் - நாயகியாக இந்தப் படத்தில் நடித்தனர். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார். ராஜா முகமது படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே தயாரித்தும் இருக்கிறார். முதல் பாகம் படம்பிடிக்கப்பட்டப் பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இசை வெளியிடப்படும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory