» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சோகமான செய்தி!

சனி 9, ஜூன் 2018 9:40:15 PM (IST)

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான ‘காலா’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக படம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓபனிங் கூட இப்படத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், ரஜினி படங்கள் வெற்றிப் பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதன் முறையாக ‘காலா’ படத்தை மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருவது ரஜினி ரசிகர்களை அப்செட்டாக்கி யுள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினி காந்தின் ‘2.0’ இந்த ஆண்டு வெளியாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மேலும் சோகமாக்கியுள்ளது.
 
ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்தே ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். இப்படி ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிப்பதும் அதை மாற்றுவதும் என்று ‘2.0’ நிலை இருக்க, தற்போது படம் இந்த ஆண்டு வெளியாகாது என்றும், அடுத்த ஆண்டு (2019) தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும், மும்பை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இன்னும் ஏகப்பட்ட காட்சிகளுக்கு விஷுல் எபெக்ட்ஸ் செய்ய வேண்டி உள்ளதால் தான் இவ்வளவு தாமதாமாகிறதாம். ஹாலிவுட் படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும், என்று இயக்குநர் ஷங்கர் விரும்புகிறாராம், அதனால் தான் காலதாமதமாகிறதாம். அத்துடன் படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory