» சினிமா » செய்திகள்

புதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்!!

சனி 19, மே 2018 11:25:43 AM (IST)திரைப்படம் வாயிலாக புதிய கட்சி தொடங்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. மகளிர் அணித் தலைவியாக அணித் தலைவி ப்ரியா ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 

சமீப சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அரசியலுக்கு வரவிருப்பதாக சுவர் விளம்பரம், அரசியல் கட்சியின் கொடி என அதகளப்படுத்திய ஆர்ஜே பாலாஜி நேற்று சிஎஸ்கே மேட்ச்சின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் LKG. அரசியல் படமான இதில் ஆர்ஜே பாலாஜி முழுநேர அரசியல்வாதியாக நடிக்கிறார்.பிக் எஃப்.எம் ஆர்ஜே-வாக பணியாற்றி பிரபலமான ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில், அவர் எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எல்கேஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அரசியல் படமான எல்கேஜி படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார். 

இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்குகிறார். ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் மகளிர் அணித் தலைவி ப்ரியா ஆனந்த் என்று ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஆர்ஜே பாலாஜிக்கு ப்ரியா ஆனந்த் அரசியல் பாடம் சொல்லிக் கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory