» சினிமா » செய்திகள்

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

வடிவேல் நடிக்க தடை விதிப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க வடிவேல் மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்சை அரசன் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். 

ஆனாலும் வடிவேல் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads






Thoothukudi Business Directory