» சினிமா » செய்திகள்

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)

கோச்சடையான் படத்துக்காக பெற்ற கடன் ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகள் சவுந்தர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கோச்சடையான். இப்படம் 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கடந்த 2014-ல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றியடையவில்லை. இப்படத்துக்கால பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ரூ.10 கோடி கடன் பெற்றது.

ஆனால் படவெளியீட்டு உரிமையைத் வேறு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையை திருப்பித் தரவில்லை என்றும் லதா ரஜினிகாந்த் மீது அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் கடனை 3 மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என  லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory