» சினிமா » செய்திகள்
நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக் கவிதை
சனி 7, ஏப்ரல் 2018 11:31:07 AM (IST)
"நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா?" என நடிகர் விவேக் டுவிட் பதிவு செய்து உள்ளார்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரித்தான் நகைச்சுவை நடையில் ட்வீட் செய்திருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் கண்டனம் தெரிவித்ததோடு காவிரி நீரையும் கோரி எதுகை மோனையாக ட்வீட் செய்திருக்கிறார்.
நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.
இவ்வாறு அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தங்கப்பதக்க நாயகனை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்
திங்கள் 23, ஏப்ரல் 2018 4:59:22 PM (IST)

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த வெர்னெ ட்ராயர் திடீர் மரணம்!
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:28:26 PM (IST)

கார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:23:48 PM (IST)

ரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்!!
சனி 21, ஏப்ரல் 2018 11:42:34 AM (IST)

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

TamilanApr 10, 2018 - 06:36:11 PM | Posted IP 141.1*****