» சினிமா » செய்திகள்

திட்டமிட்டபடி ஏப். 13-ல் மெர்குரி ரிலீஸ்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு!

வியாழன் 5, ஏப்ரல் 2018 5:37:51 PM (IST)

திட்டமிட்டபடி ஏப்ரல் 13 அன்று மெர்குரி படம் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். 

இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி.  கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் அமலில் இருக்கும் வேலை நிறுத்தத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெளனப் படம் என்பதால் ஏப்ரல் 13 அன்று வெளியாவது உறுதி என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

போராட்டங்கள் மற்றும் பந்த் ஆகியவற்றுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இன்று வெளியாகவிருந்த மெர்குரி பட டிரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெர்குரி, மெளனப் படம் என்பதாலும் ஏப்ரல் 13 அன்று உலகம் முழுக்க வெளியாகவுள்ளதாலும் இந்தப் படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி, சினிமாவை நம்பியுள்ள என் நூற்றுக்கணக்கான படக்குழுவினருக்காகவும் பட வெளியீட்டுக்கான சூழலில் உள்ளோம். எனவே இன்னும் ஒருநாள் கழித்தோ அல்லது அடுத்த இருநாளிலோ டிரெய்லர் வெளியிடப்படும். இந்நிலையில் உங்களுடைய ஆதரவைக் கோருகிறேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory