» சினிமா » செய்திகள்

காலா-வுக்கு அப்புறம் விஸ்வரூபம் 2 ரிலீஸ் : கமல் முடிவு

செவ்வாய் 27, மார்ச் 2018 4:10:40 PM (IST)

காலா ரிலீஸுக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி, நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கை அமெரிக்காவில் முடித்த கமல்ஹாசன், சென்சாருக்கும் அனுப்பி யு/ஏ சான்றிதழ் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

படத்தின் டிரெய்லரைத் தயார் செய்துவிட்ட கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சினை முடியும் என்று காத்திருக்கிறாராம். வேலை நிறுத்தம் முடிந்ததும் டிரெய்லரை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், காலா ரிலீஸுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads






Thoothukudi Business Directory