» சினிமா » செய்திகள்

டி.ஆரை கலாய்ப்பவர்களை வெளுத்து வாங்கிய சிம்பு

திங்கள் 26, மார்ச் 2018 11:09:21 AM (IST)

தன் அப்பா டி.ஆரை கிண்டல் செய்பவர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கியுள்ளார் சிம்பு.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் டி. ராஜேந்தர் நடுவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு சிம்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சிம்பு பேசிய வீடியோ அந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அப்பா பற்றி சிம்பு கூறியிருப்பதாவது: சரிகமப நிகழ்ச்சியில் என் அப்பா இருக்கிறார். 

எங்க அப்பா பற்றி பேச வேண்டும் என்றால் திறமைசாலி, அனுபவசாலியான மனிதரை பார்த்து சிலர் கிண்டல் செய்வதை பார்க்கும்போது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும். கிண்டல் செய்வது யார் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாயிலேயே மியூசிக் போடுகிற ஆளு என்று சொல்வான், கிண்டல் செய்வான். உன்னால் வாயில மியூசிக் போட முடியாது அல்லவா அதனால் நீ கிண்டல் பண்ற. தலைமுடியை இப்படி இப்படி வைத்து தலையை ஆட்டுற. இந்த வயதிலும் அவருக்கு முடி இருக்கு. உனக்கு 20 வயதிலேயே முடி போயிடுது. அதனால் அவரை கலாக்கிற.

எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஒரு மாதிரி தோன்றும். ஆனால் ஒரே பெண் ஒரே மனைவி என்று கட்டுப்பாடோடு அவர் வாழ்கிறார். அதை பார்த்தால் நீ கிண்டல் தான் பண்ணுவ. ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாக இருப்ப. அப்படி இருக்கும்போது எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் வாழ்வதை பார்த்தால் கிண்டல் பண்ணத்தான் உங்களுக்கு தோன்றும். நமக்கு எதுமே வராது என்கிறவன் தான் கிண்டல் பண்றான். இதற்கிடையே சிலர் நமக்கு திறமை இல்லை என்றாலும் இருக்கிறவனை மதிக்க வேண்டும் என்று நினைத்து அவரை மதித்ததால் தான் அவர் இன்று இந்த இடத்தில் இருக்கிறார். அந்த நல்ல உள்ளங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory