» சினிமா » செய்திகள்

மலேசியாவில் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர்: அமலாபால் அதிர்ச்சி தகவல்

திங்கள் 12, பிப்ரவரி 2018 3:42:53 PM (IST)

மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர் என்று தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடிகை அமலாபால் டுவிட்டரில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். 

நடிகை அமலாபால் மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அழகேசன் என்ற தொழில் அதிபர் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது அமலாபால் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் செய்தார்.

மலேசியாவில் உள்ள தொழில் அதிபர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது அமலாபால் தைரியமாக புகார் அளித்ததாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"எனக்கு நேர்ந்த பிரச்சினையில் நடிகர் விஷால் ஆதரவாகவும் பக்கபலமாகவும் நின்றதற்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்கள் கடமையாகும். என்னை மாமிச துண்டு போன்று வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார். அவருடையை நடவடிக்கை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.” இவ்வாறு அமலாபால் டுவிட்டரில் கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உள்பட பல நடிகைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்கள். அதற்காக சமூக வலைத்தளத்தில் நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் ‘மீ டூ’ என்ற ‘ஹேஷ்டேக்’ தொடங்கப்பட்டது. அதில் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகிறார்கள். அமலாபாலும் அதில் பதிவிட்டு இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory