» சினிமா » செய்திகள்

விசுவாசம் : அஜித்- இமான் இணையும் முதல் படம்!!

வியாழன் 8, பிப்ரவரி 2018 4:42:12 PM (IST)

விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இதன் மூலம் அஜித்- இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு விசுவாசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு விசுவாசம் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார். விசுவாசம் படத்திற்காக இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. 

மீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார். இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. 2018 தீபாவளிக்கு விசுவாசம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory