» சினிமா » செய்திகள்

எனக்கு பதவிக்கு ஆசையில்லை; ரஜினிகாந்த் என்ன செய்தாலும் கூடவே இருப்பேன்: ராகவா லாரன்ஸ்

வியாழன் 8, பிப்ரவரி 2018 4:23:15 PM (IST)

ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அவர் கூடவே இருப்பேன், எனக்கு பதவிக்கு ஆசையில்லை  என நடிகர்    ராகவா லாரன்ஸ் கூறினார்.

சேலத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் போது அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (17) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து யோகேஸ்வரன் குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவருடைய குடும்பத்தினர், என் மகன் இருந்திருந்தால் உழைத்து தங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பான் என ராகவா லாரன்சிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து யோகேஸ்வரன் குடும்பத்தினருக்கு நிலம் வாங்கி ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக்கொடுத்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.23 லட்சம் ஆகும். இந்த நிலையில் யோகேஸ்வரன் நினைவுநாளையொட்டி, புதிய வீட்டிற்கான சாவியை கொடுப்பதற்காக நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் இருந்து காரில் சேலம் சென்றார். பின்னர் அவர் யோகேஸ்வரன் குடும்பத்தினரிடம் புதிய வீட்டிற்கான சாவியை கொடுத்து ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்துக்கு நான் காவலனாக இருப்பேன் என்றதால், அரசியலுக்கு ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவிக்கு எல்லாம் எனக்கு ஆசையில்லை. ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அவர் கூடவே இருப்பேன். ரஜினிகாந்திற்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றால், அவரால் தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன்.

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது நல்ல வி‌ஷயம். எனது தாய்க்கு மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். எனது தாயார் சொன்னால் நான் அரசியலுக்கு வருவேன். ஊழலை சரிசெய்ய விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு, எந்த ஆசையும் இல்லாத மனிதர்கள் வந்தால் தான் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory