» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான்

புதன் 7, பிப்ரவரி 2018 10:11:24 PM (IST)

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் குள்ளமாக நடித்தது போல் ஷாருக்கான் இந்தியில் வித்தியாசமான தோற்றத்தில்  நடிக்கிறார். 

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார்.

இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். விராட் கோலியை சமீபத்தில் மணந்த அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஷாருக்கானை குள்ள மனிதராக மாற்றி உள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory