» சினிமா » செய்திகள்

திருமணம் குறித்து வதந்தி : நடிகை ஸ்ரேயா மறுப்பு

புதன் 7, பிப்ரவரி 2018 10:01:53 PM (IST)

திருமணம் தொடர்பான வதந்திக்கு நடிகை ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை அவர் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரேயா. ரஜினிகாந்துடன் சிவாஜி , நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என பல படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் பாலிவுட் வாய்ப்பு அவரை அழைக்க மும்பையில் செட்டிலானார். தமிழ் சினிமாவில் பெரிய இடைவெளியை விட்டிருந்த ஸ்ரேயா மீண்டும் இப்போது அரவிந்த சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜூடன் தட்கா படத்திலும் தெலுங்கில் காயத்திரி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ரஷ்ய பாய்ப்ரெண்ட்டை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக வதந்தி பரவியது. அதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரேயா நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்று கூறியுள்ளார்.  மேலும் அவரது தாயார் நீர்ஜா கூறும் போது  இதுபோன்ற எல்லா செய்திகளும் வதந்திதான். ஸ்ரேயா, ராஜஸ்தானில் நடைபெற்ற அவளுடைய நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அதற்காக புதிய உடைகளை, நகைகளை வாங்கி இருந்தார். இதுதான் உண்மை. வரும் மார்ச்சில் நடைபெற உள்ள இந்தக் கல்யாணத்திலும் உறவினர் கல்யாணம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.என விளக்கம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory