» சினிமா » செய்திகள்

நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்

செவ்வாய் 6, பிப்ரவரி 2018 12:34:34 PM (IST)

கணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா உண்ணி என்ஜீனியரை திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.

பிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணி. இவர் பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளான மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு திவ்யா உண்ணி உறவினர்.

2002-ல் திவ்யா உண்ணிக்கும் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திவ்யா உண்ணி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ள ஹூஸ்டனில் திவ்யா உண்ணி நடன பள்ளி நடத்தி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா உண்ணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. 

இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் திவ்யா உண்ணி திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். மணமகன் பெயர் அருண்குமார். இவரும் அமெரிக்காவில் என்ஜீனியராக இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory