» சினிமா » செய்திகள்

உடல் எடை குறைப்பு : புதிய தோற்றத்தில் மோகன்லால்!!

புதன் 3, ஜனவரி 2018 12:51:48 PM (IST)மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ குறைத்து புதிய தோற்றத்திற்கு மாறி உள்ளார் மோகன்லால். 

மோகன்லால் என்றாலே அவருடைய கொழுக் மொழுக் தோற்றம்தான் கண்முன் நிற்கும். அவர் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ குறைத்து சற்று ஒல்லியான தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். புத்தாண்டையொட்டி அவர் தனது பேஸ்புக்கில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவரது தோற்றத்தை கண்டவர்கள் தங்களது கண்களையே நம்ப மறுத்து இது மோகன்லால் தானா என மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்துகொண்டனர். கதாபாத்திரத்துக்காக அவர் உடற்தோற்றத்தை  முற்றிலுமாக மாற்றிக்கொண்டதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory