» சினிமா » செய்திகள்

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்

வெள்ளி 29, டிசம்பர் 2017 12:32:31 PM (IST)பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு வீரமாதேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

வடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் 70 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது: வீரமாதேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற போர் வீராங்கனை. இந்தக் கதைக்கு சன்னி லியோன் 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். கத்திச்சண்டை, குதிரையேற்றம் என சண்டைக்காட்சிகளுக்குத் தேவையான பல திறமைகளைக் கற்றுக்கொண்டு வருகிறார். ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory