» சினிமா » செய்திகள்

ஷங்கர் - கமல் இணையும் இந்தியன் 2 : அனிரூத் இசை?

செவ்வாய் 26, டிசம்பர் 2017 9:58:03 PM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

2.0 படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது 2.0 இறுதிகட்ட பணிகளில் தீவிரம்காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தினை இயக்க உள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டாலும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

முன்னதாக ரெமோ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷங்கர் "விரைவில் அனிருத்தோடு பணிபுரிவேன்" என்று தெரிவித்திருந்தார். அப்போதே 2.0வில் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். ஷங்கர் - அனிருத் இணை முதன் முறையாக இந்தியன் 2வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் 2.0 திரைக்கு வந்தவுடன் இந்தியன் 2 படத்தின் நடிகர் - நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory