» சினிமா » செய்திகள்
தொடரும் புலிக்கேசியின் இம்சை: வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை!
வியாழன் 9, நவம்பர் 2017 5:44:52 PM (IST)
ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிக்கேசி பட விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலுவுடன் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. வடிவேலு பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் தொடங்குவதற்கு வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறது படக்குழு. முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பும் தாமதமாகத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்!!
சனி 21, ஏப்ரல் 2018 11:42:34 AM (IST)

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு
புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:04:14 PM (IST)

வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 3:39:05 PM (IST)

கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:40:20 AM (IST)
