» சினிமா » செய்திகள்

இப்படை நிச்சயம் வெல்லும்: உதயநிதிக்கு ஸ்டாலின் வாழ்த்து

புதன் 8, நவம்பர் 2017 11:22:37 AM (IST)உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படை வெல்லும் படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின், இப்படை நிச்சயம் வெல்லும் என்று பாராட்டி இருக்கிறார்.

ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இப்படை வெல்லும். இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் நாராயணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வரும் நவம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஸ்டாலின் பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

உதயநிதி நடித்த படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே தவறாமல் பார்த்து வருகிறார் ஸ்டாலின். அதுபோல், இப்படை வெல்லும் படத்தையும் தன் குடும்பத்தாருடன் பார்த்திருக்கிறார். படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் கவுரவ் நாராயணன், நடிகர் சூரி உள்ளிட்டோர் வரவேற்றனர். படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், இப்படை நிச்சயம் வெல்லும் எனப் பாராட்டியுள்ளார். படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய ஸ்டாலினுக்கு, தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் மற்றும் இயக்குனர் கவுரவ் நாராயணன் நன்றி தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory