» சினிமா » செய்திகள்

அமைதியே பிரச்சினைகளுக்கு தீர்வு: விவேக் பேச்சு

சனி 4, நவம்பர் 2017 5:24:56 PM (IST)

அமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று ஆழ்வார்குறிச்சி பள்ளி விழாவில்  விவேக் கூறினார்.

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் கலாம் பசுமை இயக்கம், ஐ சப்போர்ட் பவுண்டேசன் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது: 1960-ல் இந்த ஆழ்வார்குறிச்சி கல்வி குழுங்களின் பள்ளி தொடங்கப்பட்டு 56 வருடங்கள் ஆகின்றன. கிராமப்புறங்களில் இதுபோன்று இலவச கல்வி கொடுத்து வருவது மிகப்பெரிய விஷயம்.

நான் சினிமா உலகத்திற்கு வந்து 39 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பத்மஸ்ரீ விருதும் வாங்கியுள்ளேன். இந்த பள்ளியில் இதுவரை எந்த ஒரு நடிகரையும் அழைத்ததில்லை என்றார்கள். நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் விவேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அய்யா அப்துல்கலாம் எனக்கு கொடுத்த கடமையை நான் செய்து வருகிறேன். 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர் கூறினார். தற்போது 29 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திரைப்படங்களுக்கு தடைகள் வருவதும், அதை மீறுவதும் சில, பல காலங்களாக நடந்து வருவது தான். மெர்சல் பட விவகாரத்தை விஜய் மிக கவனமாக கையாண்டார். அதே போல அஜித் பற்றி சில விஷயங்கள் வெளி வந்தபோதும் அவர் பக்குவமாக அமைதி காத்து கையாண்டார். அமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory