» சினிமா » செய்திகள்

மெர்சல் வெற்றி - படக்குழுவினருக்கு விருந்தளித்த விஜய்!!

சனி 4, நவம்பர் 2017 12:25:06 PM (IST)மெர்சல் படக்குழுவினருக்கு விருந்தளித்திருக்கிறார் விஜய்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். தீபாவளியன்று வெளியான இப்படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்களால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உலகம் முழுவதும் மொத்த வசூல் சுமார் 200 கோடி ரூபாயை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது முந்தைய படங்களின் வசூல் முறியடிப்பு உள்ளிட்டவற்றால் பெரும் சந்தோஷமடைந்தார் விஜய்.

இதையடுத்து மெர்சல் படக்குழுவினருக்கு விருந்தளித்திருக்கிறார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory