» சினிமா » செய்திகள்

நான் நலமுடன் இருக்கிறேன் : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.சுசீலா

வெள்ளி 3, நவம்பர் 2017 1:39:48 PM (IST)

தான் நன்றாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பழம்பெரும் பாடகி பி.சுசீலா கேட்டு கொண்டுள்ளார்.

பழம்பெரும் திரையிசைப் பாடகி பி.சுசீலா 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல இந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். 

இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவி வருகிறது.இதனை அறிந்த அவர் அமெரிக்காவில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றி என்னவோ சொல்கிறார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று மனம் நொந்து பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory